
கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் நேற்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
தமது தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதால் அமைதியாக நாட்டு மக்கள் போராட வேண்டும் என தெரிவித்தனர்.