
அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரதானியான கே.டி.எஸ். ருவன் சந்திர அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும், மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ரோஹன புஸ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.