நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு காணொளி ஒன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய வன்முறை நாடு முழுவதும் பரவியது. குடிமகனின் உரிமைகளை அமைதியாகக் கோரி வந்த இளைஞர்கள் குழு மீது அரசு குண்டர்கள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த வன்முறை நாடு முழுவதும் மேலும் மேலும் பரவி வருகிறது. இந்த நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே அல்லது தேசியப் பட்டியலில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பிரதமரை நியமித்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும். வேறு வழியில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாட்டில் சட்டம் ஒழுங்கு உடனடியாக நிலைநாட்டப்பட வேண்டும். புதிய அரசாங்கம் அமைந்தவுடன் ஆறு மாதங்கள் நீடிக்கும் தேர்தலுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.