
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அரச வாகனங்கள் உட்பட 41 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.60 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 219 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சொத்து இழப்புகளின் பெறுமதி தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.