நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற மே-18 இன அழிப்பு ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வில் அவ் வீதியால் வந்த விசேட அதிரடிப் படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கினர்.
மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தொடங்கிய இன்றைய தினம் வியாழக்கிழமை தொடக்கம் உப்பில்லாக் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு நல்லூர் ஆலய வீதியில் காஞ்சி வழங்கிய உறவினர்கள் விசேட அதிரடிப் படையினருக்கு கூறும் போது நாங்களும் அம்மாமார் தான் பயப்படாமல் கஞ்சியை குடியுங்கள் என கூறி வழங்கினர்.