





ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்