
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த யோசனை, ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச, ஜனாதிபதியோடு போசியபோது, அவர் முன்னர் பதவியை ஏற்க அவர் மறுத்ததால், தொடரும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் வாய்ந்த ஒருவரை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக, ஜனாதிபதி அவரிடம் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.