இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு வயது 34…..!சி.அ.யோதிலிங்கம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29 ஆம் திகதியுடன் 34 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு பெரிய பயன்களைத்தரவில்லை. இந்தியாவிற்கும் தரவில்லை. இந்தியப்படைகள் தமிழ் மக்களினதும்.  சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமான கரமாக வெளியேறின.

அதன் பின்னர் இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிப்பதிலும் ஈடுபட்டது.  விளைவு தென்னாசியாவின் அதிகாரச்சமநிலை சீனாவிற்கு சார்பாக மாறியது. இன்று அமெரிக்காவுடன் இணைந்து சீனாவின் செல்வாக்கை கீழிறக்க இந்தோ – பசுபிக்
மூலோபாயத்திட்டத்தை நகர்த்துகின்ற போதும் அது பெரியளவிற்கு முன்னேறவில்லை. மறுபக்கத்தில் தமிழ் மக்கள் இந்தியாவின் அணுகுமுறையினால் பெருந் தேசியவாதத்தின் வாயில் கொண்டு போய் விடப்பட்டனர்.ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு இணைப்பைப் பாதுகாக்கவும் இந்தியா தவறிவிட்டது. மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை
சிறீலங்கா அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக பறித்த போது இந்தியா மௌனமாக இருந்தது.
இன்று வெறும் எலும்புக்கூடாகவே மாகாணசபை முறை காணப்படுகின்றது. உண்மையில் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்குமே. இரண்டு தரப்புமே ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டும். இந்தியா நடுநிலையாளராக இருந்திருக்க வேண்டும. இதற்கு
மாறாக தமிழ் மக்களின் சார்பாக இந்தியாவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. தமிழ் மக்களின்
நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற பதவியை வலிந்து இந்தியா தானாக எடுத்துக் கொண்டது.
ஆனால் அதற்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஒப்பந்தத்தின் நோக்கம் தமிழ் மக்களின் நலன்களல்ல . மாறாக இந்திய தேசிய பாதுகாப்பு நலன்களே அதற்கு உத்தரவாதத்தை ஜே.ஆர். அரசாங்கம் வழங்கியவுடன் தமிழ் மக்களை நடு வீதியில் விட்டது இந்தியா. ஒப்பந்தத்திற்கு புறம்பாக பின்னிணைப்பாக இருந்த
கடிதங்களில் இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.  இறுதியில் அந்த உத்தரவாத்திலும் இந்தியா வெற்றி பெறவில்லை. இன்று கொழும்புத்துறைமுகத்தையே சீனா தனது செல்வாக்கின்
கீழ்கொண்டு வந்த போது இந்தியா எதுவும் செய்ய முடியாமல் திணறுகிறது
1977 ஆம் ஆண்டு 5/6 பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம்
அமெரிக்காவுக்கு இலங்கையின் கதவுகளை வரையறையின்றி திறந்து விட்டது. இது இந்திய தேசிய
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தமையினால் இந்தியா தமிழர் விவகாரத்தை கையிலெடுத்தது.
1983 ம் ஆண்டு இன அழிப்பு நடவடிக்கை இதற்கான வலுவான சந்தர்ப்பத்தை இந்தியாவிற்கு கொடுத்தது. இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களையும்ரூபவ் பயிற்சிகளையும் வழங்கியதோடு பின் தள வசதிகளையும் செய்த கொடுத்தது. விடுதலை இயக்கங்களின் ஆயதப்போராட்டத்தினால் இலங்கை தடுமாறிய போது இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு இலங்கையை பணிய வைத்ததோடு ஆயுதப் போராட்டத்தையும் அழிக்க முற்பட்டது. 1985 ம் ஆண்டின் திம்பு மாநாடும் 1986 ம் ஆண்டின் பெங்க@ர் சந்திப்பும் தோல்வியில் முடியவே தமிழ்த்தரப்பை ஒதுக்கிவிட்டு தான் மட்டும் ஒப்பந்தம் செய்ய இந்தியா
முனைப்புக்காட்டியது. ஏனைய ஆயுத இயக்கங்கள் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு பணிந்த போக
பணிய மறுத்த பிரபாகரனை ராஜீவ்காந்தி தீர்வு பற்றி கதைக்க விரும்புகின்றார் எனக்கூறி
வஞ்சகமாக புதுடில்லிக்கு அழைத்துச் சென்றனர். புதுடில்லிக்கு பிரபாகரன் செல்லும் வரை ஒப்பந்தம் பற்றி அவருக்கு எதுவும் கூறவில்லை

பிரபாகரன் புது டில்லிக்கு 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23 ஆம் திகதி
அழைத்துச் செல்லப்பட்டாh.; அங்கு அசோக் விடுதியில் பிரபாகரனும் அவரது குழுவினரும் சிறைவைக்கப்பட்டனர். அவரது வெளித்தொடர்பு உட்பட தொலைபேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்சிற் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கான நகலை பிரபாகரன்
முன்வைத்தார். ஒப்பந்த நகல் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை சிபார்சு செய்தது. வட-கிழக்கு
நிரந்தாரமாக இணைக்கப்படவில்லை. மாகாண சபையின் அதிகாரங்கள் செயற்பாடுகள் பற்றி
தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கவில்லை. ஆயுதக்களைவு ஏற்பாடுகள் ஏற்றதாக இருக்கவில்லை. இதனால் “தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க முடியாத இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது” எனப்
பிரபாகரன் கூறினார். “ஏற்காவிட்டால் உங்களை இங்கு தடுப்புக்காவலில் வைப்போம்” என டிக்சிற் மிரட்டினார். “விரும்பினால் தடுப்புக்காவலில் வையுங்கள் நாங்கள் ஏற்க
மாட்டோம்” எனக் கூறினார் பிரபாகரன். கோபம் கொப்பளிக்க டிக்சிற் தனது சுங்கானை பிரபாகரனுக்கு காட்டியவாறு “இந்தச் சுங்கானை நான் பற்றவைத்து புகைத்து முடிப்பதற்குள்
இந்தியப் படைகள் உங்கள் படைகளை துவம்சம் செய்து விடும்” என்றார். பிரபாகரன் ஏளனச்
சிரிப்புடன் “முடிந்ததைச் செய்து பாருங்கள்” என்றார். கொதிப்படைந்த டிக்சிற் “மிஸ்டர்
பிரபாகரன் இத்துடன் நான்காவது தடவையாக இந்தியாவை ஏமாற்றியுள்ளீர்கள்” என்றார்.
அதற்கு பிரபாகரன் “அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து எமது மக்களை காப்பாற்றியிருக்கிறேன்” என்றார் பிரபாகரன். டிக்சிற் ஆத்திரத்துடன் எழுந்து
வெளியே சென்று விட்டார். இந்தியப்படைகள் அவமானத்துடன் இலங்கையை விட்டு வெளியேறிய
போது கவிஞர் காசிஆனந்தன் “டிக்சிற் சுங்கானில் இன்னமும் புகைத்து முடிக்கவில்லை” என
நக்கலாக கூறியிருந்தார்.
2.பிரபாகரனை மிரட்டிப் பணியவைக்க முடியாது என அறிந்த இந்திய வெளிவிவகார அதிகாரிகள் எம்.கே.நாராயணன்ரூபவ் சகாதேவ் பூரி போன்றவர்கள் மென்மையான முறையைக்கையாள முயற்சித்தனர். அதற்கும் பிரபாகரன் இடம் கொடுக்கவில்லை. அடுத்த முயற்சியாக
எம்.ஜி.ஆர் மூலம் பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக அவரை அழைத்து வந்தனர். பிரபாகரன்
மிக விரிவாக ஒப்பந்த குறைபாடுகளை எம்.ஜி.ஆருக்கு விளக்கினார். எம்.ஜி.ஆர் அதனை ஏற்றுக் கொண்டு “உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருங்கள் நான் உங்களோடு
இருப்பேன்” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

3 இறுதியில் ஒப்பந்த தினத்திற்கு முதல்நாள் ஆடி 28 ஆம் திகதி நள்ளிரவு
ராஜீவ்காந்தியை சந்திக்க பிரபாகரனை அழைத்துச் சென்றனர். ராஜீவிடம் ஒப்பந்தக்
குறைபாடுகளை விபரமாக முன்வைக்கும் படி பாலசிங்கத்தை வேண்டினார் பிரபாகரன். இது பற்றி
பாலசிங்கம் பின்வருமாறு கூறினார். “முதலில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல்
அமைப்புப் பற்றி மிகச் சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன். மிகவும் இறுக்கமானரூபவ்
நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு பெரும்பான்மையினரின் நலன்களைப்
பேணும் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் யாப்பின் கீழ்ரூபவ் மத்திய
அரசுக்கும் மாநிலங்களுக்கும் மத்தியில் அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப்பகிர்வு
செய்வது இயலாத காரியம் என விளக்கினேன்”
“பரந்த நிறைவேற்று அதிகாரங்களையுமுடைய ஜனாதிபதியை அரச அதிபராகக் கொண்ட ஒரு
இறுக்கமான ஒற்றையாட்சி அரசை சிறீலங்காவில் அரசியல் யாப்பு உருவாக்கம் செய்துள்ளது.
இந்த அரசியலமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில்
குவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான ஒற்றறையாட்சி யாப்பை இந்திய – இலங்கை ஒப்பந்தம்
நிபந்தனையின்றி முழுமையாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாகரூபவ் நியாய பூர்வமாக அதிகாரப்
பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது” எனச் சுட்டிக் காட்டினேன். “இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களும்
செயற்பாடுகளும் நிர்வாகத் துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர்
19’ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு
செய்யலாமென ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ‘டிசம்பர் 19’ தீர்வு
யோசனைகளின் பல குறைபாடுகள் உள்ளதென சுட்டிக்காட்டி எமது இயக்கம் ஏற்கனவே அதனை
நிராகரித்துள்ளது” என்பதையும் பாரதப்பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.
“தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனையைப் பொறுத்தமட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது. இலங்கை தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட
தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும்ரூபவ் தமிழ் பேசும்
முஸ்லீம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த
நிலம்ரூபவ் அவர்களது பாரம்பரிய தாயக நிலம்ரூபவ் இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்த
திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை” என்பதையும் ரஜீவ் காந்தியிடம்
எடுத்துரைத்தேன். “வட கிழக்கு மாகாணங்கள் தனித்தவொரு நிர்வாகப் பிரதேசமாக இந்திய – இலங்கை
ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருப்பது ஒரு ஆக்கபூர்வமான சாதனை. ஆயினும் இந்த இணைப்பு
தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு பொதுசன கருத்து வாக்கெடுப்புக்கு விடப்படடிருப்பதை
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால்ரூபவ் வாக்கெடுப்பில் சிங்கள
முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வட கிழக்கு நிரந்தரமாக
பிளவு படுவதுடன்ரூபவ் தமிழ் தாயகம் காலப் போக்கில் சிதைந்துவிடும்” என விளக்கினேன்.

4

பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர்ரூபவ் அவ்வப்போது
குறிப்புக்களை எடுத்தார்.
“மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டது
என்றும்ரூபவ் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும்
விளக்கினேன். “வடகிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிடும் ஆற்றல் அதிகாரம் இலங்கையின் அரச
அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு
நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை” என்று கூறினார் பிரபாகரன்.
இறுதியாகரூபவ் “இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது
விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென விதிப்பது அநீதியானது. எத்தனையோ
ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிரூபவ் உயிர்களைத் தியாகம் செய்து பெறப்பட்ட ஆயுதங்களை
நான்கு நாட்களுக்குள் சரணடையுமாறு ஒப்பந்தம் வற்புறுத்துகிறது. தமிழரின் தேசிய
இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்பாகரூபவ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத்
தகுந்த உத்தரவாதங்கள் பெறுவதற்கு முன்னராகரூபவ் எமது மக்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும்
ஆயுதங்களைக் கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது” என்றார்
பிரபாகரன்.
“மாகாண சபைத் திட்டம் தற்காலிகமானது அதன் குறைபாடுகளை பின்னர் நிவர்த்தி செய்;ய
முயற்சிப்பேன். வட- கிழக்கு இணைப்பு தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்படாது. அதற்கு நான்
உத்தரவாதம் தருகிறேன்” என ராஜீவ்காந்தி கூறினார். “இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின்
நலன்களைப் பேணவில்லை மாறாக தமிழ்மக்களின் நலன்களைப் பாதிக்கின்றது. ஆகவே இந்த
உடன்படிக்கையை ஏற்க முடியாது” எனத் திட்டவட்டமாகக் கூறினார் பிரபாகரன். அவரின் உறுதியைப்
புரிந்து கொண்ட ராஜீவ்காந்தி “ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம் எதிர்ப்புத் தெரிவிக்காமல்
இருங்கள்” எனக் கேட்டார்.
“மாகாணசபை திட்டம் உடனடியாக வருவது சாத்தியமற்றது அக்கால இடைவெளியில் இடைக்கால அரசை
உருவாக்கலாம். அதில் உங்கள் இயக்கம் பிரதான பாத்திரத்தை வகிக்கலாம். இது விடயத்தில்
உங்களுடன் இரகசிய உடன்பாடு செய்யவும் தயாராக இருக்கின்றேன்” என்றும் கூறினார்
ராஜீவ்காந்தி. இடைக்கால நிர்வாகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மைப்
பிரதிநிதித்துவம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. சகல தமிழ் இயக்கங்களுக்கும்
பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என ராஜீவ் வேண்டினார். பிரபாகரன் அதனை ஏற்கவில்லை
இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்ரூபவ் ரூடவ்ரோஸ் அமைப்பிற்கும் குறைந்த அளவில்
பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ்ப்பகுதிகளில்
சிங்களக்குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும் என்றும் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள
அரசாங்கம் காவல் நிலையங்களை திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
ராஜீவ் அதற்கும் இணக்கம் தெரிவித்தார்.
ஆயுதக் கையளிப்பு விடயம் தொடர்பில் “அனைத்து ஆயுதங்களையும் நீங்கள் கையளிக்கத்
தேவையில்லை. உங்களது படையணியையும் கலைக்கத் தேவையில்லை நல்லெண்ண சமிக்ஞையாக சிறுதொகை

5

ஆயுதங்களை கையளித்தால் போதும்” என்றும் ராஜீவ்காந்தி குறிப்பிடார். அருகில் இருந்த
பன்ருட்டி இராமச்சந்திரன் “இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பழுதடைந்த
ஆயுதங்களைக் கையளித்தால் போதும்” என்றார். “இந்தியாவிடமிருந்து பெற்ற ஆயுதங்கள்
எல்லாம் பழுதடைந்தவை தான்” எனக் கிண்டலாக இராமச்சந்திரனுக்கு பதில் அளித்தார் பிரபாகரன்.
அதிகாலை இரண்டுமணிக்கு ராஜீவ்காந்தியுடனான சந்திப்பு முடிந்தது. சந்திப்பு முடியும்
தறுவாயில் “பிரதமர் கூறிய வாக்குறுதிகளை எழுத்தில் வரைந்து இருதலைவர்களும் கைச்சாத்திட்டால்
என்ன?” என பாலசிங்கம் பன்ருட்டி இராமச்சந்திரனிடம் கேட்டார். “நீங்கள் கவலை கொள்ளத்
தேவையில்லை வாக்குறுதிகளை கட்டாயம் நான் நிறைவேற்றுவேன் இது எழுதப்படாத ஒப்பந்தமாக
இருக்கட்டும்” என்றார் ராஜீவ்காந்தி. பிரபாகரனை உடனடியாக யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு
ஒழுங்கு செய்வதாகவும் ராஜீவ்காந்தி உறுதியளித்தார்.
சந்திப்பு முடிவடையும் போது அதிகாலை 02 மணி. ராஜுவ் காந்தி உற்சாகத்துடனேயே
இருந்தார். அடுத்த நாள் அதிகாலை 09 மணிக்கு புதுடில்லியிலிருந்து அவர் கொழும்பு செல்ல
வேண்டும். பிற்பகல் 03 மணிக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட
ஏற்பாடாகியிருந்தது. விடுதிக்கு சென்ற பின் “இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும்
நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் அரசியல் ஏமாற்று வித்தை” எனப் பிரபாகரன்
கூறினார். அடுத்தநாள் 1987 ஆடி 29 ஆம் திகதி கொழும்பில் வைத்து இலங்கை இந்திய
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை இன முரண்பாட்டில் சம்பந்தப் பட்டவர்கள் தமிழர்களும்ரூபவ் சிங்களவர்களுமே.
அவ்விருதரப்பின் தலைவர்களுமே. ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். இந்தியா அதனை
மீறியது. தானே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதன் மூலம் தமிழர்களின் பொறுப்பை தானே
ஏற்றுக் கொண்டது. இறுதியில் அந்தப் பொறுப்பு விடயத்திலும் இந்தியா ஒழுங்காகச்
செயற்படவில்லை.
முன்னர் கூறியது போல ஒப்பந்தத்தில் இந்தியாவின் நலன்கள் பின் இணைப்பாக வரும்
கடிதங்களில் சேர்க்கப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான சக்திகளுக்கு இலங்கைத் தீவில் இடம்
கொடுப்பதில்லை என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இறுதியில் இந்த இலக்கிலும் இந்தியா வெற்றி
பெறவில்லை.
மொத்தத்தில் இந்திய இராஜ தந்திரத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விதான். இலங்கை
– இந்திய ஒப்பந்தம்.
இந்தியா இனிமேலாவது தனது இராஜ தந்திர அணுகுமுறையை மாற்றுமா?
இதுதான் இன்றைய மிகப் பெரிய கேள்வி…

Recommended For You

About the Author: Editor Elukainews