முடியும் தருவாயில் வெளிநாட்டு கையிருப்பு – மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒரு வாரத்திற்கு கூட போதுமானதாக இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்று தீவிரமடைந்துள்ளதாகவும், அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப்பெட்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதை முடிந்தவரை தவிர்க்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் இறக்குமதி பொருட்களை வாங்காவிட்டால், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதனால் டாலர் கையிருப்பு மிச்சமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் அரசியல் ஸ்தீரமற்ற நிலை உருவாகியுள்ள நிலையில்,  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்படும் எனவும் எரிபொருள் பற்றாகுறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews