புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்த தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார் எனவும், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்புகின்றார்கள் எனவும் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் ஆரம்பத்தில் இருந்தே ரணில் விக்ரமசிங்க சட்டபூர்வ தன்மையை இழந்துள்ளதாகவும் ஒரு தொகுதியில் கூட அவர் வெற்றிபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.