புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதை கடுமையாக சாடியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இது மீண்டுமொரு முறை ராஜபக்சாக்களை காப்பாற்றுவதற்கான ஏமாற்றும் ஜனாதிபதியின் சிறுபிள்ளைத்தனமான முயற்சி என குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் தனது தொகுதியால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ஆறாவது முறை பிரதமராக வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார், அவரது கட்சியின் ஒரேயொரு உறுப்பினர் அவர், ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள ராஜபக்ச தலைமையிலான பொதுஜனபெரமுனவிடமே அனைத்தும் தங்கியிருக்கும்’ என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.