வெற்றிலைக்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு  வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக  கடந்த (10) திகதி சந்தேகத்தின் பெயரில் குறித்த  இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்து  நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு மறுநாள் (11)திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் மீட்கப்பட்டது.
இதில்  இராசன் சிவஞானம்  எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக காணப்பட்டிருந்தார் குறித்த நபர் விடுதலைப்புலிகளின் சிறை கைதிகளுக்கான பொறுப்பாளராக கடமையாற்றியவர் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
நேற்று  முன்தினம்  (12) கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி சட்டதரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.இவர் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் 14நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews