
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில் நேற்றிரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு போதிய டீசல் வந்தும் வாகனங்களுக்கு வழங்காமையால் வாகன சாரதிகள் விசனம் கொண்டு வீதியை மறித்து போராட்டத்தை மேற்கொண்டார்கள்




அவ்விடத்திற்க்கு விரைந்த பொலிஸார் அவசர நிலை உள்ளபோது வீதியை மறிக்க வேண்டாம் என தெரிவித்ததை அடுத்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை நோக்கி மாவட்ட அரசாங்கதிபரை சந்திப்பதற்காக சாரதிகள் சென்றிருந்தனர். மாவட்ட செயல மேலதிக அரசாங்கதிபர் ஸ்ரீமோகன் சாரதிகளோடு கலந்துரையாடியிருந்தார்..
இதன் பின்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உயர் அதிகாரிகளோடு மாவட்ட செயல மேலதிக அரசாங்கதிபர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதை தொடர்ந்து 5000ரூபாக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட பின்னர் சாரதிகளின் போராட்டம் கைவிடப்பட்டு பின்பு 5000 ரூபாய்க்கு வாகனங்களுக்கு டீசல் விநியோகிக்கப்பட்டது.