
நான்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.