அரிசி விலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு!

நாட்டில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தனி உரிமையாளராக இருந்தால் 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 500,000 ரூபா முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews