கோட்டா கோ கமவிற்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு குழுவை நியமித்தார் பிரதமர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோகமஆர்ப் பாட்டகாரர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் குழு ஒன்றை நியமித்துள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன, பொலிஸ் மற்றும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் செயற்பாடுகளுக்கு தேவையான சுகாதார அமைச்சின் பிரதிநிதி மற்றும் அமைதியை நிலைநாட்ட இராணுவம்  மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எவையும் இடம்பெறாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews