
நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பதவிகளை ஏற்காமல், நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு தமது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.