கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி,
முள்ளிவாய்க்கால் நினைவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்களால் கிளிநொச்சி நகர் பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலை முச்சக்கரவண்டி தரிப்பிட உரிமையாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.
மேலும், பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சூசைப்பிள்ளை சிற்றாலயம் முன்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
திருகோணமலை சிவன் கோவில் ஆலயத்தின் முன்றலில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (16) முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நாள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாற்றில் இடம் பிடித்த ஒரு நாள் எனவும்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி யுத்தத்தின்போது தங்குவதற்கு இடமில்லாமல் உண்பதற்கு உணவில்லாமல் தவித்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்றையதினம் திருகோணமலை சிவன் கோவில் வளாகத்தில் உப்புக் கஞ்சி காய்ச்சி அவர்களை நினைவு கூறுகின்றோம் என தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று(16) வடக்கு கிழக்க பகுதிகளில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் நினைவாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காச்சி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு பொது சந்தை முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் கஞ்சிவழங்கும் நிழக்வு நடைபெற்றுள்ளது. இறுதிப்போரின் போது மக்களுக்கு கஞ்சிகாச்சி வழங்கிய தாயார் ஒருவர் இதன்போது கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – முள்ளியவளை
இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஐந்தாவது நாளில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு செயற்பாடு இன்று (16)முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
[