
யாழ் கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.




சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்கி நின்று கல்வி கற்று வருகின்றனர்.
இந் நிலையில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுப்பேர் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான யாழ்ப்பாணப் பொலிசருக்கு தகவல் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.