2009 மே 18 என்பது தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும் என ் தமிழர் விடுதலை கூட்டணி மகளீர் பேரவை செயலாளர் திருமதி: சூரியமூர்த்தி சூரியபிதீபா வாசவன் குறிப்பிட்டுள்ளார் இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது
2009 மே 18 ஆயுதப்போராட்டம் , முடிவிக்கு வந்தாக கூறப்படுகின்ற நிலையிலும், இன்று வரை போரினால் கொல்லப்பட்ட இனத்திற்கு நீதியோ, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையோ இன்று வரை வழங்கப்படவில்லை.
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நாம் இத்தினத்தினை சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தாலும்,அவர்களை கொடுரமான முறையில் கொன்று குவித்ததற்கு நீதியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெற்று கொடுத்தால் மட்டுமே அவர்களின் ஆத்மா நிரந்தரமாக அமைதி அடையும்.
தொடர்ந்தும் இவ் நினை வேந்தலை நிகழ்த்துவதற்கு பல இன்னல்கள் நெருக்கடிகள் வந்தாலும் , எமது மக்களாக, உறவுகளுக்காக நினைவேந்தும் உரிமையும்,கடமையும் , எம் இனத்தக்கு உண்டு. இத்தினத்திதை யாரும் அரசியலுக்காக பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது .
இவர்களின் அழிவிற்கு அன்றய தினத்தல் பாராளுமன்ற
உறுப்பினர் பதவியில் இருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.
வெறும் அஞ்சிலி நிகழ்வுகளை செய்வதனால் மட்டும் இறந்த அப்பாவி மக்களின் சாபத்தில் இருந்து யாரும் தப்பி விட முடியாது.இன்றைய நாட்டு அரசியல் நிலைமை இதனை நன்கு உணர்த்துகிறது.
.
இப்படியான நிகழ்வுகளை சிறந்த முறையில் வலுவாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிக்கனதும் பங்களிப்பும் அவசியம் என்பதனையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதே ஓர் மே 18 இல் தான் 2005 மே 18 இல் சில இதயமற்ற சில இனத் துரோகிகளால் எனது தந்தை அமர் சூரியமூர்தியும் சன்னம் சுட்டு விழ்த்தப்பட்டார் 7ஆம் நாள் 25/05 /2005 மரணம் அவரை தழுவிக்கொண்டது, இது மன்னிக்கமுடியாதது இவ்வாறான உயிர்களை பலி கொண்டவர்கள் நிட்சயம் ஒருநாள் நீதி தேவதையின் முன் பதில் கூறியாக வேண்டும். என்றுள்ளது