பல நூற்றாண்டு பழமையான குறித்த ஆலயத்தில் கிழக்கிலங்கையின் தனித்துவமிக்க பாரம்பரிய சடங்கு முறைகளைக்கொண்டதாக ஒரு நாள் திருச்சடங்காகவும் நடைபெற்றுவருகின்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மாலை பண்டைய கால முறைகளுக்கு அமைவாக பறவைக்காவடிகள் மற்றும் காவடிகள் சகிதம் சிறுமிகளின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன், ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தி வர பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து அம்மன் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்;ந்து வழிபாடுகள் நடைபெற்று ஆலயத்தின் முக்கிய திருச்சடங்கான பூரணகும்பம் நிறுத்தும் நிகழ்வு நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
சிறுமிகள் ஆரத்தி எடுக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன் இந்த
பூரணகும்பம் நிறுத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன்
நூற்றுக்காணக்கானோர் ஆலயத்தில் அங்கபிரதட்சனம் செய்து தமது நேர்த்திகளை நிறைவுசெய்தனர்.
நேற்று அதிகாலை செவ்வாய்க்காடும் நிகழ்வுடன் பல்வேறு பூஜை வழிபாடுகளுடன் உற்சவம் நிறைவுபெற்றது.
ஈஸ்டர் தாக்குதல்,கொரோனா சூழ்நிலை போன்ற காரணத்தினால் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக குறித்த திருச்சடங்கு சிறப்பிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றதுடன் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.