
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று (மே 18) விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ்இ பி.ஆர்.கவாய்இ ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்இ ‘ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு. ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால்இ அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது’ என்று தெரிவித்தது.