





யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக ஒவ்வொருமுறையும் முள்ளிவாய்க்காலிற்கு செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தில் 5ற்குமேற்பட்ட பேருந்தில் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்து சென்றது.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காக காலை 9:00 மணியளவில் பரந்தன் சந்தியில் பேருந்து நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தீடிரென பேருந்திற்குள் நுழைந்த நபரொருவர் உடனடியாக கீழிறங்கி முன்பிருந்த கடையொன்றிற்குள் சென்றார்.இதனிடையே சந்தேக மடைந்த மாணவர்கள் கடைக்கு சென்று யார் நீங்கள் எதற்காக பேருந்தில் ஏறி விட்டு இறங்கினீர்கள் என கேட்டனர் அதற்கு நாம் புலனாய்வு பிரிவினர் எனவும் முள்ளிவாய்க்கால் செல்லும் பேருந்து என்ற அடிப்படையில் ஏறிப்பார்த்தேன் என கூறினார்.இதனிடையே மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனிடையே அவ்விடத்தில் நின்ற மற்றுமொருவர் தானும் புலனாய்வாளர் எனக்கூறி மாணவர்களிடம் மன்னிப்பு கோரினார்.இதனையடுத்து குறித்த இருவரும் தென்மாகாண இலக்கத்தகட்டையுடையை sp wc 5115 எனும் மோட்டார் சைக்கிளில் வருகைதந்தாக அவ்விடத்திற்கு வருகைதந்துள்ளனர்.