



நாவாந்துறை மக்களின் ஏற்பாட்டில் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை இளம் சமுதாயத்தினருக்கு நினைவுபடுத்தும் முகமாக முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது.
மே மாதம் 13 தொடக்கம் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றநிலையில் வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நாவாந்துறை மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது