மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஒன்றுகூடிய பொதுமக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூறும் முகமாக பொது ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்திய பின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் ஈடுபட்டனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் சமய தலைவர்கள், கிழக்கைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட கிராமிய மட்ட மக்கள், கிராம மட்ட சிவில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
இதன்போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தின அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டன .
•வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும்
•போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறல் வேண்டும்
•அனைத்து தழிழ் அரசியல் கைதிகளையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடன் விடுவிக்க வேண்டும்
•வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கலை முடிவுறுத்தல்
•அனைத்து வகையான காணி அபகரிப்புகளையும் உடன் நிறுத்த வேண்டும்
•சிறுபான்மை மக்களின் மத, கலாச்சார தலங்களை ஆக்கிரமிப்பதை உடன் நிறுத்த வேண்டும்
•பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற விடயங்கள் இன்றைய நினைவேந்தல் தின அறிக்கையினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.