
யாழ்.மாவட்டத்தில் கடும் காற்று வீசிவரும் நிலையில் வீட்டின் முன்னால் இருந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த முதியவர் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் 80 வயதுடைய சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார்.