யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கரகம்பன் கிராம மக்களால் நேற்றைய தினம் (18) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 12/05 /2022 அன்று கடைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த
16 வயதுடைய கரகம்பன், மந்திகை, புலோலியை சேர்ந்த ஜெயச்சந்திரன் அனுஜன் என்ற மாணவன் அதே இடத்தை சேர்ந்த நபர் ஒருவரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குறித்த மாணவனை தாக்கியதின் பேரில் சந்தேக நபர் நேற்று முன்தினம் பருத்தித்துறை பொலீசின் விசேட பொலீஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்த வேளை அங்கு கூடிய மக்கள் குறித்த சந்தேக நபர் ஏற்கனவே பாரிய குற்றச்சாட்டில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவரென்றும் அந்நிலையிலேயே தான் குறித்த மாணவன் மீது தாக்குதல் நடாத்தயுள்ளதாகவும் அவரை மீண்டும் பிணையில் விடுதலை செய்தால் தமக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் எனும் அச்சத்தால் குறித்த சந்தேக நபருக்கு பிணைவழங்க வேண்டாம் என கோரியே பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த பருத்தித்துறை பொலீஸ் நிலைய தலமை போலீஸ் பரிசோதகர்
தாம் குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்க கூடாது என்று மன்றில் கோரிக்கை முன் வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் எதிர்வரும் 30/05/2022. வரை நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.