தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எரிபொருள் விநியோகம், மருந்து பொருட்களின் தேவைப்பாடு, சுகாதாரத் தேவைகள் , போக்குவரத்து சேவை, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் தேவை, அம்புலன்ஸ் சேவை, மின்சார பயன்பாடு, மாவட்டத்தின் உணவு தேவைப்பாடு மற்றும் விலைகள், காஸ் சிலிண்டர் விநியோகம் போன்ற நடைமுறை விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பணிப்பாளர் ( யாழ்.போதனா வைத்தியசாலை), பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், இராணுவ பிரதிநிகள், பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.