
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் நேற்றையதினம் 20.05.2022 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதியே விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைத்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.