
ஆசிரியர் காதை பொத்தி அறைந்ததால் செவிப்பறை பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
யாழ்.நகரை அண்மித்துள்ள மிக பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தரம் 10ல் கல்வி கற்றும் மாணவனை அறைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து காதில் சுகயீனமடைந்த நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது