
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா துரைரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் குடும்பத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது
துரைரட்ணசிங்கம் அவர்கள் ஆசிரியராக, அதிபராக, உதவிக்கல்விப்பணிப்பாளராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும், பணியாற்றியது டன் மூன்று தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.




இந் நினைவஞ்சலி நிகழ்வில் திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு முத்துசாமிக்குருக்கள், காளி கோவில் பிரதம குரு இரவிச்சந்திரக் குருக்கள், திருகோணமலை பேராயர் இம்மானுவேல் ஆண்டகை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான
சீ.யோகேஸவரன்பா.அரியநேத்திரன், சி சிறீநேசன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள; தண்டாயுதபாணி துரைராசசிங்கம் உள்ளிட்டோரும் பிரதேச செயலாளர்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் ஓய்வு நிலை வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.