
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரணதர பரீட்சையல் தோற்றவுள்ள மாணவி எனவும்விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.