ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்தாவது
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பாக தங்களுக்கு கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னரும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை என்றும் இதனால் தாம் கடற்றொழிலிற்க்கு செல்ல முடியாது தமது வாழ்வாதாரத்திற்க்காக பெரிதும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு நாளாந்தம் குறைந்தபட்சம் 40 லிட்டர் எரிபொருள் தேவை என்றும், ஆனாலும் கடந்த காலங்களில் வாரத்திற்க்கு மட்டும் 40 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதுவும் கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவில்லை என்றும் தமது கடற்தொழிலில் படகு மற்றும் உபகரணங்களை கரையிலே ஏற்றிவைத்துவிட்டு தாம் தூங்கிக் கொண்டிருப்பதாக மீனவர்கள் மேலும் தெரிவிப்பதுடன் தமது வாழ்வாதாரத்திற்கு நாளாந்த மிகப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , இது தொடர்பில் தமது தமிழ் அரசியல் வாதிகளும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் அவர்களது இல்லங்களை முற்றுகையிட்டு கோட்டா கோ கம போன்று செயற்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும்
தற்போது ரணில் விக்கிரம சிங்க பதவியேற்ரன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் விட்டதாகவும், ரணில் ஒரு குள்ள நரியன் என்றும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.