
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெற்றுக் காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது வெடிக்காத நிலையில் கைக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பல காலமாக துப்புரவு செய்யப்படாத காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது மண்ணுக்குள் இரும்புப் பெட்டிகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசேட அதிரடிப் படையின் உதவியுடன் குறித்த குண்டுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.