எரிபொருள் விநியோகத்தில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படவும்- கல்வி அமைச்சர்.

கல்வி பொதுதர சாதாணத்தர பரீட்சைகள் இன்றைய  தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள 25,000 அதிகாரிகளுக்கு எரிபொருள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுதர சாதாரணத்தர பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள 25,000 அதிகாரிகளுக்கும் எரிபொருள்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறு சகல தரப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews