பரீட்சை நிலையங்களுக்கு தாமதித்து வரும் மாணவர்களை திருப்பி அனுப்பாதீர் -பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.

பரீட்சை நிலையங்களுக்கு தாமதித்து வரும் மாணவர்களை திருப்பி அனுப்பாது அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுதர சாதாரணத்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் க.பொ.த சாதாரணத்தர பரீட்சை சிறந்த முறையில் நடைபெற்று முடிவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையங்களுக்கும் நேரத்துடன் வரவேண்டியது மிகவும் அவசியமானது.

பரீட்சை நிலையங்களுக்கு வழமையைவிடவும் நேரத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சை கடமைகளை ஈடுபட்டுள்ள அதிகாரிகள், மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.

பரீட்சை நிலையத்துக்கு மாணவர் ஒருவர் தாமதித்து வருவாராயின் அவரை திருப்பி அனுப்பாது பரீட்சைக்கு தோற்றுவதற்கான ஏற்பாடுகளை அந்த மாணவருக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். இவ்விடயத்தில் விசேட அவதானத்தை செலுத்துவது அவசியம்.

பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews