நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக எரிபொருள் தாங்கிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.
இந்த கடிதம் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வாவினால் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் ஞாயிற்க்கிழமை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன.
கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.