உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு “முக்கிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்” என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி அழைப்பின் போது, போரிஸ் ஜான்சன் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவின் முற்றுகை தொடர்பில் பேசியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு நாடும் உக்ரைனின் சுதந்திரப் போராட்டத்தில், இப்போதும் நீண்ட காலத்திலும் உதவ வேண்டிய கடமை உள்ளது,” என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் “உக்ரைன் மக்கள் அனைவரும் சேர்ந்து, விரைவில் ஒரு நாள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று தனது ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.”