
யாழ்.நெல்லியடி நகர் பகுதியில் தொடர்ச்சியாக துவிச்சக்கரவண்டி களவாடிவந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையும் நெல்லியடி நகர் பகுதியில் துவிச்சக்கரவண்டி களவாடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸ் குழுவினர் நடத்திய தேடுதலில்,
கரவெட்டி – காட்டுக்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.