இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான , ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் வருகை தந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றிதெரிவித்தார்.
மேலும்இந்தியாவினுடைய பெருமையும்,தமிழக முதல்வரின் மதிப்பும் இந்த நேரத்தில் இலங்கையில் உயர்ந்திருக்கிறது என குறிப்பிட்ட அவர்
நிவாரணப்பொருட்களின் விநியோகம் இந்திய உயர்ஸ்தானிகர்கள் மூலமாக வழங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டிலிருந்து வரும் நிவாரணப்பொருட்களுக்கு அரசியல் செய்யக்கூடாது என கோரிக்கைவைத்த இலங்கை எம்.பி ராதாகிருஷ்ணண்,
வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் இனாமாக வழங்கிட வேண்டும் அதேபோல்
வறுமைகோட்டில் மிகவும் பின்தங்கிய சமுதாயமான மலையக தமிழர்களுக்கும் நிவாரணப்பொருட் கள் போய்ச் சேரவேண்டும் என தெரிவித்தார். மேலும் இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு தமிழக அரசு மதிப்பும் மரியாதையும் கொடுத்துவருகிறது.அதனை பாராட்டுவதாக குறிப்பிட்ட அவர்,
பேரறிவாளன் விடுதலையை தமிழன் என்ற அடிப்படையில் வரவேற்கிறோம்.இந்திய நீதிமன்றித்தின் தீர்ப்பு செம்மையாக இருந்திருக்கின்றது அதனை நாங்கள் பாராட்டுகின்றோம் என தெரிவித்துள்ளார்.