கொழும்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் கூடிய அரசியல் நெருக்கடி காரணமாக போக்குவரத்துப் பிரச்சினையானது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
எனினும் பரீட்சை கடமைகளுக்கு செல்வோர் எவ்வித இடையூறுமின்றி எரிபொருள்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம், அரசாங்கம் மற்றும் பல தரப்பினர் நேற்றைய தினம் அறிவிப்பை விடுத்திருந்தனர்.
அரசாங்கம் அறிவித்த வகையில் குறிப்பிட்ட சிலருக்கே அதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. எரிபொருள் விநியோகத்தில் ஒரு முறைமை இல்லாததன் காரணமாக பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடையூறை எதிர்கொண்டனர்.
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றே கூறவேண்டியுள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாமல் இருந்தமையும் இதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.
எனவே பரீட்சைகள் தொடர்ந்த நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் இதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறே நாம் உரியத்தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கினறோம்.
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருளை விநியோகிக்குமாறே நேற்றைய தினம் அரசாங்கம் உடனடி அறிவிப்பை விடுத்திருந்தது. எனவே இவ்வாறு முன்னரிமை அளிக்கப்படாத பிரேதசங்கள் குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.