உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி அலகா சிங், இன்று (23) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தார்.
இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்கு முன்னைய காலத்தைவிட மேலும் வலுவான ஆதரவை வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.