குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அங்கு முறைகேடுகள் இல்லாமல் அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு பொலிஸாரும் கடமையில் இருந்தனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு முன்பாகவே கொள்கலன்களில் எரிபொருள் வழங்குவதில்லை. என்ற தீர்மானத்தை மீறி 20 லீற்றர் பெற்றோல் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மற்றும் பொலிஸாருடன் முரண்பட்டனர்.
எனினும் பின்னர் நிலைமை சுமுகமாக முடிந்துள்ளது.