கூட்டத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் 5ம் வட்டார பிரிவில் வாழும் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளைப் தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஒத்துழைப்புடன் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டு இருந்தன.
அந்தவகையில் கிராமங்களில் வறிய குடும்பங்களின் தரவுகளை பெற்றுக் கொண்டு புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் பொது அமைப்புக்களிடம் இருந்தும் வாழ்வாதார உதவிகளை பெற்று முடிந்தளவு வறிய மக்களுக்கான உதவிகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று இருந்தன.
திருக்கோவில் பிரதேச 5ம் வட்டாரக் கிளையின் பொதுச் செயலாளர் பி.நந்தபாலுவின் ஒழுங்கு படுத்தலின் ஊடாக இடம் பெற்ற இவ் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் ஏ.கலாநேசன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனின் பிரதியேக செயலாளர் எம்.கண்ணதாசன் வட்டாரக்கிளைத் தலைவர் ஏ.எஸ்.கார்த்திகேசு பொருளாளர் எஸ்.ரமேஷ் வட்டாரக்கிளையின் மகளிர் அணித் தலைவி ஆர்.அல்லிராணி வாலிப முன்னணித் தலைவர் ரீ.பத்மேந்திரா மற்றும் வட்டார கிளையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.