அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக வீதியில் காத்திருந்த மக்களுக்கு நேற்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுக் சங்க வளாகத்தில் இன்று திருக்கோவில் பொலிசாரின் பாதுகாப்புடன் மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை வரிசையில் சுமார் 400க்கு மேற்பட்ட மக்கள் காத்திருந்த போதும் சுமார் 250பேருக்கே மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தன.
இதனைத் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்கள் தீர்ந்து விட்டதாக முகவர்கள் தெரிவித்து வாகனத்தை எடுத்த வேளை எரிவாயு சிலிண்டர் வாகனத்தினுள் இருப்பதாக தெரிவித்து பொது மக்கள் வாகனத்தை சுற்றிவளைத்து முகவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அமைதியின்மை ஏற்பட்டது.
பொலிசார் தலையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அமைதிப்படுத்தியதுடன் மீண்டும் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த வாகனத்தினுள் இருந்து சுமார் 10க்கு மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது.