
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள விசேடதேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக 1600 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திமிலைத்தீவு,சேத்துக்குடா,கொக்குவில்,நாவலடி, சத்துருக்கொண்டான்,பனிச்சையடி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட விசேடதேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக 200 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சர்வோதய நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.