மட்டக்களப்பில் உள்ள சில பாடசாலைகளில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையினை மீறும் செயற்பாடு என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்.உதயரூபன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.