
சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது
இதில் மோட்டார் சயிக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந் நிலையில் காயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்



குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.