நாடளாவிய ரீதியில் எரிபொருளைச் சேமித்து வைத்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சேமிப்பில் ஈடுபட்டு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட 429 தேடுதல் வேட்டைகளின் மூலம் 137 பேர் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 27 ஆயிரம் லீற்றர் பெட்ரோல் மற்றும் 22 ஆயிரம் லீற்றர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான தேடுதல் வேட்டைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.