ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை மேற்குலக நாடுகள் நீக்குமாயின், முற்றுகைக்குள்ளான உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானிய உணவுகளை கப்பல்கள் மூலம் கொண்டுசெல்ல அனுமதிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான உணவை ரஷ்யா பணயமாக வைப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்களை ரஷ்யா தடை செய்துள்ளதால் உலகளாவிய ரீதியில் உணவு விநியோகம் பாரிய நெருங்கடியை எதிர்நோக்கியுள்ளதுடன், உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்வடைந்து வருகின்றன.